செய்திகள்
எச்டிசி யு: வெளியீட்டு தேதி மற்றும் முழு சிறப்பம்சங்கள்
எச்டிசி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எச்டிசி யு மாடல் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி ஒருவழியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்கான டீசர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
சாம்சங் மற்றும் எல்ஜி நிறுவனஙகளின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்டு விரைவில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், எச்டிசி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட யு ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எச்டிசி வெளியிட்டுள்ள டீசரில் வெளியீட்டு தேதியுடன் பல்வேறு சிறப்பம்சங்களும் தெரியவந்துள்ளது.
எச்டிசி யு ஸ்மார்ட்போன் மே மாதம் 16-ந்தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எச்டிசி நிறுவனத்தின் டீசர் வீடியோ ட்விட்டரில் வெளியிடப்பட்டது. இதில் எச்டிசி யு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் எட்ஜ் சென்சார் அம்சம் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வெளியான தகவல்களில் இந்த சென்சார்கள் ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேவை சுற்றி மேல் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டச் சென்சிட்டிவ் ஃபிரேம் கொண்டு சத்தத்தை மாற்றியமைத்தும், செயலிகளை இயக்கவும் வழி செய்யும்.
எனினும் இந்த அம்சங்கள் ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் அழுத்தத்தை கொண்டே இயங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஸ்மார்ட்போனில் எவ்வித பட்டன்களும் இல்லாத உலகின் முதல் ஸ்மார்ட்போன் என கூறப்படுகிறது.
சிறப்பம்சங்களை பொருத்த வரை எச்டிசி யு 5.5 இன்ச் QHD டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் வழங்கப்படும் என கூறப்படுகின்றது. இததுடன் 4ஜிபி /6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி அல்லது 128 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம்.
புகைப்படங்களை எடுக்க 16 எம்பி செல்ஃபி கேமராவும், 12 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என்றும் 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என்றும் குவிக் சார்ஜ் 3.0 வசதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.