செய்திகள்

டூயல் பிரைமரி மற்றும் செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்

Published On 2017-04-06 16:50 IST   |   Update On 2017-04-06 16:50:00 IST
இந்தியாவில் மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்களை போன்றே ஆல்காடெல் நிறுவனமும் டூயல் பிரைமரி மற்றும் செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
புதுடெல்லி:

ஸ்மார்ட்போன்களில் டூயல் கேமரா அமைப்பு ஃபிளாக்‌ஷிப் வகை ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்த நிலையில் சில நிறுவனங்கள் இரட்டை கேமரா அமைப்பை செல்ஃபி எடுக்க ஏதுவாக வழங்கினர். அந்தவகையில் ஒப்போ, விவோ மற்றும் எல்ஜி நிறுவனங்களை போன்றே ஆல்காடெல் நிறுவனமும் இரட்டை செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. 

சிறப்பம்சங்களை பொருத்த வரை ஆல்காடெல் பிளாஷ் ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் ஃபுல் எச்டி திரை, ஹீலியோ டீக்கா-கோர் பிராசஸர், 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது. இத்துடன் ஹீலியோ X20 டீக்கா-கோர் பிராசஸர், கைரேகை ஸ்கேனர் மற்றும் 3100 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. 

புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒரு கேமரா கலர் புகைப்படங்களையும், மற்றொரு கேமரா கருப்பு, வெள்ளை நிறத்திலும் புகைப்படத்தை எடுக்கும். இரு லென்ஸ்களிலும் f/2.0 வகை அப்ரேச்சர் வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய கேமரா அமைப்பு மூலம் புகைப்படங்களை மிக துல்லியமாக, அதன் உண்மையான நிறம் மாறாமல் படமாக்க முடியும். 



செல்ஃபி எடுக்க 8.0 எம்பி மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இரு கேமராவிற்கும் ஒரே அளவு அப்ரேச்சர் வழங்கப்பட்டுள்ளது. இரட்டை செல்ஃபி கேமரா அமைப்பை கொண்டு புகைப்படங்களை எடுத்த பின்பும் அவற்றின் போகஸ்-ஐ மாற்ற முடியும். 

ஆல்காடெல் பிளாஷ் ஸ்மார்ட்போனின் கனெக்டிவிட்டியை பொருத்த வரை வை-பை, ப்ளூடூத் 4.1, யுஎஸ்பி ஓடிஜி, டைப்-சி போர்ட், GPRS/EDGE, GPS, A-GPS/Glonass/Beidou, AGPS மற்றும் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆல்காடெல் பிளாஷ் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை தேதி குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

Similar News