செய்திகள்

நொடிக்கு 1ஜிபி இண்டர்நெட் வேகம் பெறும் முதல் இந்திய நகரம்: முழு தகவல்கள்

Published On 2017-03-31 13:36 IST   |   Update On 2017-03-31 13:36:00 IST
இந்தியாவில் ஒரு நொடிக்கு 1 ஜிபி என்ற வேகத்தில் இண்டர்நெட் சேவையை பெறும் முதல் நகரம் மற்றும் இத்தகைய வேகத்தில் இண்டர்நெட் வழங்கும் நிறுவனம் எது என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
ஹைதராபாத்:

இந்தியா முழுத்த தற்சமயம் பயன்படுத்தப்பட்டு வரும் இண்டர்நெட் வேகம் நொடிக்கு 2.5 எம்பியாக (2.5 Mbps) உள்ள நிலையில், பெங்களூருவை சேர்ந்த இண்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனமான ஆக்ட் ஃபைபர்நெட் (ACT Fibernet) நொடிக்கு 1 ஜிபி (1Gbps) வரை இண்டர்நெட் வேகம் வழங்குவதாக அறிவித்துள்ளது. 

அதன்படி ஹைதராபாத் நகரில் பிராட்பேண்ட் சேவைகளின் மூலம் நொடிக்கு 1 ஜிபி என்ற வேகத்தில் இண்டர்நெட் வழங்குவதாக அறிவித்துள்ளது. சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஹைதராபாத்தில் இதற்கான பணிகள் ஒரு ஆண்டிற்கும் மேலாக நடைபெற்று வந்தது. 



இந்நிலையில், ஹைதராபாத் நகரில் 1 ஜிபி திட்டம் ஒரு மாதத்திற்கு ரூ.5,999 என்ற விலையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலத்தின் தகவல் தொழில்நுட்ப மந்திரி ராமா ராவ் இந்த திட்டத்தை துவங்கி வைத்தார். 

தெலங்கானாவில் முதற்கட்டமாக துவங்கப்பட்டுள்ள 1 ஜிபி திட்டம், அதிகளவு இண்டர்நெட் பயன்பாட்டு வழிமுறைகளை முற்றிலுமாக மாற்றியமைக்கும் என்றும், தெலங்கானாவின் 23 மில்லியன் மக்களுக்கும் இண்டர்நெட் வழங்கும் இம்மாநில அரசாங்கத்தின் இலக்கை அடைய பயனுள்ளதாக இருக்கும் என ஆக்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பாலா மல்லாடி தெரிவித்துள்ளார்.

Similar News