செய்திகள்

இரட்டை செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்: விரைவில் வெளியீடு

Published On 2017-03-30 16:24 IST   |   Update On 2017-03-30 16:24:00 IST
எல்ஜி நிறுவனம் இரட்டை கேமரா கொண்ட தனது முதல் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ள நிலையில், அதில் வழங்கப்பட இருக்கும் சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:

எல்ஜி நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியான நிலையில் புதிய ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன் படி புதிய ஸ்மார்ட்போன் எல்ஜி ஜி6 என அழைக்கப்படலாம் என்றும் இதில் இரட்டை செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

அதன்படி புதிய ஸ்மார்ட்போனின் முன்பக்க பேனலின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் புதிய எல்ஜி ஸ்மார்ட்போனில் இரட்டை செல்ஃபி கேமரா இடம் பெறும் என தெரியவந்துள்ளது. இதுவரை டூயல் பிரைமரி கேமரா வழங்கப்பட்டு வந்த நிலையில் இரட்டை செல்ஃபி கேமரா கொண்ட முதல் எல்ஜி ஸ்மார்ட்போன் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.



சிறப்பம்சங்களை பொருத்த வரை எல்ஜி வி30 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் மற்றும் 6 ஜிபி ரேம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. எல்ஜி வி20 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட நிலையில் புதிய ஸ்மார்ட்போன் வெளியீடு குறித்து எவ்வித தகவலும் இல்லை. 

முன்னதாக எல்ஜி நிறுவனத்தின் ஜி6 ஸ்மார்ட்போன் கடந்த மாதம் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் பல்வேறு புதிய சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில் கொரியாவில் முதல் நாள் விற்பனையில் 20,000 எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 

சிறப்பம்சங்களை பொருத்த வரை எஸ்ஜி ஜி6 குவால்காம் ஸ்னாப்டிராகன் 821 சிப்செட் மற்றும் 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டது. இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 3300 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.   

Similar News