செய்திகள்
குவால்காம் 821 சிப்செட் கொண்டு உருவாகும் Mi6 ஸ்மார்ட்போன்: முழு தகவல்கள்
சியோமி நிறுவனத்தின் Mi6 ஸ்மார்ட்போனில் குவால்காம் 835 சிப்செட் வழங்கப்படும் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் குவால்காம் 821 சிப்செட் வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
பீஜிங்:
இந்தியாவில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வரும் சியோமி, ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனையும் தயாரித்து வருகிறது. சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் Mi 6 ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருக்கும் சிப்செட் சார்ந்து பல்வேறு தகவல்கள் வெளியானது.
அந்த வகையில் சியோமி Mi6 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர் கொண்டு இயங்கும் என கூறப்பட்டு வந்த நிலையில் குவால்காம் 821 சிப்செட் வழங்கப்படலாம் என தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் தெரிவிக்கின்றன. வெய்போ சமூகவலைத்தள பக்கத்தில் சியோமி குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் சார்ந்த அறிவிப்பு பகிர்ந்து கொள்ளப்பட்டிருந்ததை தொடர்ந்து புதிய தகவல்கள் வெளியானது.
ஏற்கனவே வெளியான தகவல்களில் சியோமி Mi6 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் வழங்கப்படலாம் என கூறப்பட்டது. Mi6 ஸ்மார்ட்போன் மூன்று மாடல்களில் வெளியாகும் என்பதால் ஒரு மாடலில் மீடியாடெக் ஹீலியோ X30 சிப்செட் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சிறப்பம்சங்களை பொருத்த வரை Mi6 ஸ்மார்ட்போனில் 5.2 இன்ச் ஃபுல் எச்டி TFT LCD டிஸ்ப்ளே, 4ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, உயர் ரக மாடலில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சியோமி Mi6 ஸ்மார்ட்போனில் 12 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX386 சென்சார், 4K வீடியோ பதிவு செய்யும் வசதி, டூயல்டோன் எல்இடி பிளாஷ், 8 எம்பி செல்ஃபி கேமரா, சோனி IMX268 சென்சார் வழங்கப்படலாம் என கூறப்பட்டது. எனினும் சமீபத்தில் வெளியான தகவல்களில் Mi6 ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா அமைப்பு மற்றும் டூயல் எல்இடி பிளாஷ் வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது.
Mi6 ஸ்மார்ட்போனில் சியோமி 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரியை வழங்கும் என்றும், யுஎஸ்பி டைப்-சி கனெக்டிவிட்டி மற்றும் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.