இந்தியா

தெலுங்கானாவில் பெட்ரோல் தட்டுப்பாடு: குதிரையில் சென்று உணவு வினியோகம் செய்த ஊழியர்

Published On 2024-01-03 10:33 IST   |   Update On 2024-01-03 10:45:00 IST
  • பைக் வைத்திருப்பவர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
  • வித்தியாசமான முறையில் உணவு வினியோகம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தெலுங்கானா மாநிலத்தில் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்தால் பெட்ரோல் , டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு சில பெட்ரோல் பங்குகளில் மட்டும் பெட்ரோல், டீசல் உள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் நீண்ட தூரம் வரிசையில் நின்று தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல், டீசலை நிரப்பி செல்கின்றனர். இதனால் பைக் வைத்திருப்பவர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தனியார் நிறுவன உணவு விநியோகம் செய்யும் ஊழியர் ஒருவர் தனது பைக்குக்கு பெட்ரோல் இல்லாததால் குதிரையில் சென்று உணவு வினியோகம் செய்தார்.

தனியார் நிறுவன ஊழியர் குதிரையில் சென்று உணவு விநியோகம் செய்வதை சிலர் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர்.

வித்தியாசமான முறையில் உணவு வினியோகம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Tags:    

Similar News