இந்தியா
விமானத்தில் பெண்ணிடம் சில்மிஷம் செய்தவர் கைது
- விமானம் நடுவானில் பறந்த போது அவரது இருக்கைக்கு பின்னால் இருந்த ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
- போலீசார் ஜோசை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
திருவனந்தபுரம்:
பெங்களூரூவில் இருந்து திருவனந்தபுரத்துக்கு தனியார் விமானம் புறப்பட்டு வந்தது. இந்த விமானத்தில் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் பயணித்துள்ளார். விமானம் நடுவானில் பறந்த போது அவரது இருக்கைக்கு பின்னால் இருந்த ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
திருவனந்தபுரத்தில் விமானம் தரை இறங்கியதும் அந்த பெண் இதுபற்றி விமான நிறுவன அதிகாரிகளிடம் புகார் செய்தார். அதன்பேரில் வட்டப்பாராவை சேர்ந்த ஜோஸ் என்பவரை அதிகாரிகள் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் ஜோசை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.