இந்தியா

சைக்கிள் ஓட்டியபடி பிரபல இந்தி பாடலுக்கு நடனமாடிய இளம்பெண்

Published On 2023-01-13 07:17 GMT   |   Update On 2023-01-13 07:17 GMT
  • பாடலுக்கு ஏற்ப சைக்கிள் ஓட்டியபடியே அந்த இளம்பெண் கைகளால் நடனம் ஆடுகிறார்
  • மஞ்சள் நிறத்தில் குர்தா அணிந்தபடி சைக்கிள் ஓட்டியவாறு அந்த பெண் கைகளை அசைத்து நடனம் ஆடுவது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மும்பை:

இந்தியில் பிரபலமான 'ஆப்கா அனா' என்ற பாடலுக்கு இளம்பெண் ஒருவர் சைக்கிள் ஓட்டியபடி நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த பெண்ணின் பெயர் பஸ்ரா. இவர் சாலையில் கையை விட்டபடி சைக்கிள் ஓட்டி வருகிறார். அப்போது 'ஆப்கா அனா' என்ற பாடல் ஒலிக்கிறது.

இந்த பாடலுக்கு ஏற்ப சைக்கிள் ஓட்டியபடியே அந்த இளம்பெண் கைகளால் நடனம் ஆடுகிறார். மஞ்சள் நிறத்தில் குர்தா அணிந்தபடி சைக்கிள் ஓட்டியவாறு அந்த பெண் கைகளை அசைத்து நடனம் ஆடுவது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

Tags:    

Similar News