இந்தியா
LIVE

மேற்கு வங்க ரெயில் விபத்து: பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்... லைவ் அப்டேட்ஸ்...

Published On 2024-06-17 11:35 IST   |   Update On 2024-06-17 17:15:00 IST
2024-06-17 07:13 GMT

சிக்னலை கவனிக்காமல் சென்றதே ரெயில் விபத்துக்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

2024-06-17 07:06 GMT

விரைவு ரெயில் மீது சரக்கு ரெயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது. மேலும் 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

2024-06-17 06:53 GMT

ரெயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெறுவோர் பூரண உடல்நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். ரெயில் பாதையில் விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகியுள்ள நிலையில், இதுகுறித்த விசாரணை நடத்தி, இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாவண்ணம் ரெயில்வே போக்குவரத்தை சரிவர கண்காணிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

2024-06-17 06:48 GMT

மேற்கு வங்காள மாநிலத்தின் டார்ஜீலிங்கில் அரங்கேறிய ரெயில் விபத்து சம்பவம் வேதனை அடைய செய்கிறது. எனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாருடனேயே உள்ளது. காயமுற்றவர்கள் விரைந்து குணமடையவும், மீட்பு பணிகள் விரைந்து நடைபெறவும் விழைகிறேன் என்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

2024-06-17 06:44 GMT

மேற்கு வங்க ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சமும், காயமுற்றவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு.

2024-06-17 06:37 GMT

மேற்கு வங்க ரெயில் விபத்து உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்

மேற்கு வங்க ரெயில் விபத்து தொடர்பாக பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், "மேற்கு வங்க ரெயில் விபத்து சம்பவம் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமுற்றவர்கள் விரைந்து குணமடைய வேண்டுகிறேன். அதிகாரிகளுடன் பேசி, கள நிலவரம் குறித்து கேட்டறிந்தேன். மீட்பு பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. விபத்து பகுதிக்கு ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் வந்து கொண்டிருக்கிறார்," என குறிப்பிட்டுள்ளார். 

2024-06-17 06:14 GMT

காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்து நடந்த இடத்தை பார்வையிட ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டார்ஜிலிங் செல்கிறார்.

2024-06-17 06:14 GMT

மேற்கு வங்க ரெயில் விபத்து... டெல்லியில் உள்ள இந்திய ரெயில்வே அதிகாரிகள் நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.

2024-06-17 06:14 GMT

ரெயில் விபத்து தொடர்பான விவரங்களை பெற உதவி எண்கள் அறிவிப்பு...

2024-06-17 06:14 GMT

எதிர்பாராத விபத்து வடகிழக்கு எல்லை ரயில்வே மண்டலத்தில் நடந்துள்ளது. போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடக்கின்றன. ரயில்வே, NDRF மற்றும் SDRF ஆகியவை ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு வருகின்றன- மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு

Tags:    

Similar News