மேற்கு வங்க ரெயில் விபத்து உயிரிழந்தவர்களுக்கு... ... மேற்கு வங்க ரெயில் விபத்து: பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்... லைவ் அப்டேட்ஸ்...
மேற்கு வங்க ரெயில் விபத்து உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்
மேற்கு வங்க ரெயில் விபத்து தொடர்பாக பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், "மேற்கு வங்க ரெயில் விபத்து சம்பவம் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமுற்றவர்கள் விரைந்து குணமடைய வேண்டுகிறேன். அதிகாரிகளுடன் பேசி, கள நிலவரம் குறித்து கேட்டறிந்தேன். மீட்பு பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. விபத்து பகுதிக்கு ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் வந்து கொண்டிருக்கிறார்," என குறிப்பிட்டுள்ளார்.
Update: 2024-06-17 06:37 GMT