இந்தியா

வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதிக்கு ரூ.2 கோடி வழங்கிய பஜாஜ் பின்சர்வ்

Published On 2024-09-26 20:22 IST   |   Update On 2024-09-26 20:22:00 IST
  • வயநாட்டில் வசிப்பவர்கள் வாழ்வாதாரத்தை கட்டமைக்கும் வகையில் கடன் வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்தும் பஜாஜ்.
  • வயநாட்டில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு காப்பீட்டு தொகையை விரைவாக வழங்க நடவடிக்கை.

கேரள மாநிலம் வயநாட்டில் கடும் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் பலியானதோடு ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் அவர்களுக்கான நிவாரண நிதியாக 2 கோடி ரூபாயை பஜாஜ் பின்சர்வ் நிறுவனம் வழங்கியது.

மேலும் அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரையில் கடன் வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதேபோல் பஜாஜ் அலையன்ஸ் லைப் இன்சூரன்ஸ் மற்றும் பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் ஆகியவை வயநாட்டில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு காப்பீட்டு தொகையை விரைவாக வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.

வயநாடு நிலச்சரிவு நிவாரணத்திற்காக கேரள மாநில பேரிடர் நிவாரண நிதியில் ஆன்லைன் மூலம் 2 கோடி ரூபாயை பஜாஜ் நிறுவனம் வழங்கியது. அதனைத் தொடர்ந்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை பஜாஜ் பின்சர்வ் நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணரும் கார்ப்பரேட் விவகாரங்கள் பிரிவு தலைவருமான என் சீனிவாச ராவ் மற்றும் பஜாஜ் அலையன்ஸ் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சட்ட மற்றும் இணக்கப் பிரிவு மூத்த தலைவர் அனில் ஆகியோர் சந்தித்தனர்.

Tags:    

Similar News