இந்தியா

உ.பி., அயோத்தியில் லாரி மீது பேருந்து மோதி விபத்து: 5 பேர் பலி- 12 பேர் படுகாயம்

Published On 2023-04-22 02:21 IST   |   Update On 2023-04-22 02:21:00 IST
  • விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல்.
  • மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் நேற்று பேருந்து ஒன்று லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த சுமார் 12 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த விபத்து, லக்னோ-கோரக்பூர் நெடுஞ்சாலையில் நான்காம் எண் சாவடிக்கு அருகில் விபத்து ஏற்பட்டது. தனியார் பேருந்து லக்னோவில் இருந்து அம்பேத்கர் நகர் நோக்கி சென்று கொண்டிருந்தது. விபத்தில் மோதிய வேகத்தில் பேருந்து லாரிக்கு அடியில் புதைந்தது.

மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளதாக, அவரது அலுவலகம் டுவீட் செய்துள்ளது. காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News