டெல்லி ரெயில் நிலையத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
- டிக்கெட் கிடைக்காதவர்கள் முதலில் ஹோல்டிங் ஏரியாவுக்கு நேரடியாக அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- வடக்கு ரெயில்வே போர் அறையில் இந்த ஆய்வு நடக்கிறது.
டெல்லி ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
புதுடெல்லி ரெயில் நிலையத்தில் அணுகல் கட்டுப்பாடு மற்றும் கூட்டத்தை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பயணிகள் முன்பதிவு டிக்கெட் வைத்திருந்தால், அவர்கள் நேரடியாக நிலையத்திற்குள் செல்வார்கள். டிக்கெட் கிடைக்காதவர்கள் முதலில் ஹோல்டிங் ஏரியாவுக்கு நேரடியாக அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல் தளத்தில் முன்பதிவில்லா டிக்கெட்டுகளுக்கான கவுன்டர்கள் அனைத்தும் அகற்றப்பட்டு, டிக்கெட் வாங்கியவர்கள் மட்டுமே ஸ்டேஷனுக்குள் நுழையும் வகையில் ஹோல்டிங் ஏரியாவில் கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வடக்கு ரெயில்வே போர் அறையில் இந்த ஆய்வு நடக்கிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.