இந்தியா

நெருக்கடி நிலையில் சிறையிலிருந்த பெண்மணி: அரசியல் சாசனம் வழங்கி கவுரவித்த அமித்ஷா

Published On 2025-06-24 20:21 IST   |   Update On 2025-06-24 20:21:00 IST
  • இந்தியாவில் 1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி எமர்ஜென்சி அறிமுகம் செய்யப்பட்டது.
  • எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டதன் 50-ம் ஆண்டு நிகழ்ச்சி டெல்லியில் இன்று நடைபெற்றது.

புதுடெல்லி:

இந்தியாவில் 1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி எமர்ஜென்சி அமல் செய்யப்பட்டது.

இந்நிலையில், எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டதன் 50-ம் ஆண்டு நிகழ்ச்சி தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார்.

அப்போது எமர்ஜென்சியின் போது சிறையில் இருந்த சுமிதா ஆர்யா என்ற பெண்மணி மேடைக்கு வரவழைக்கப்பட்டார். மேடையேறி வந்த அந்த பெண்மணியின் காலில் விழுந்து அமித்ஷா ஆசி பெற்றார்.

அதன்பின், அந்தப் பெண்மணிக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். தொடர்ந்து, அவருக்கு அரசியல் சாசன புத்தகத்தையும் வழங்கி சிறப்பித்தார்.

சுமிதா ஆர்யா என்ற பெண்மணி எமர்ஜென்சியின் போது தனது 3 குழந்தைகளுடன் சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News