இந்தியா

மத்திய பட்ஜெட் 2023: மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான உச்சபட்ச வரம்பு ரூ.30 லட்சமாக உயர்வு

Published On 2023-02-01 06:50 GMT   |   Update On 2023-02-01 08:29 GMT
  • ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுவார்கள்
  • பல்வேறு மாநிலங்களில் 30 சர்வதேச திறன் இந்தியா மையங்கள் அமைக்கப்படும்

புதுடெல்லி:

பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2023-24ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:

  • டிஜிட்டல் நீதிமன்றங்கள் மேம்பாட்டிற்கு ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கீடு
  • 42 மத்திய சட்டங்களை மாற்றி அமைப்பதற்காக ஜன் விஷ்வாஷ் என்ற மசோதா கொண்டு வரப்படும்
  • பசுமை எரிசக்தி துறை மேம்பாட்டிற்கு ரூ.35,000 கோடி நிதி ஒதுக்கீடு
  • லடாக்கில் உற்பத்தியாகும் பசுமை மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல ரூ.20,700 கோடி நிதி ஒதுக்கீடு
  • இயற்கை உரங்களை ஊக்குவிக்க "பிஎம் பிரனாம்" என்ற புதிய திட்டம் உருவாக்கப்படும்
  • ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுவார்கள்
  • நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் 3 செயற்கை நுன்னறிவு (AI) சென்டர்கள் நிறுவப்படும்
  • நகர்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்காக ரூ.10,000 கோடி ஒதுக்கீடு
  • பிரதமரின் கவுசல் யோஜனா திட்டத்தின் கீழ் அடுத்த 3 ஆண்டுகளில் லட்சக்கணக்கான இளைஞர்கள் திறன்படுத்தப்படுவர்
  • சுற்றுலா மேம்பாட்டிற்காக 50 முக்கிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன
  • பல்வேறு மாநிலங்களில் 30 சர்வதேச திறன் இந்தியா மையங்கள் அமைக்கப்படும்
  • 5ஜி சேவைகளுக்கான செயலிகளை உருவாக்க 100 ஆய்வகங்கள், பொறியியல் கல்வி நிறுவனங்களில் உருவாக்கப்படும்
  • சுற்றுலாவை மேம்படுத்த யூனிட்டி மால்ஸ் என்ற பெயரில் வணிக வளாகங்கள் உருவாக்கப்படும்
  • போக்குவரத்து துறைக்கு ரூ.75,000 கோடி நிதி ஒதுக்கீடு
  • சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடன் உத்தரவாத திட்டத்திற்கு கூடுதலாக ரூ.9000 கோடி நிதி ஒதுக்கீடு
  • வங்கி செயல்முறையை மேலும் சிறப்பாக்க வங்கி முறைப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர நடவடிக்கை
  • மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் என்ற புதிய சேமிப்பு திட்டம் உருவாக்கப்படும்
  • பெண்களின் பெயரில் 2 ஆண்டுகள் முதலீடு செய்யும் வகையில் 7 சதவீத வட்டி வழங்கப்படும்
  • மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான உச்சபட்ச வரம்பு ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
Tags:    

Similar News