இந்தியா

2,000 ரூபாய் நோட்டு வாபஸ்: நக்சலைட்டு தளபதியின் ரூ.6 லட்சத்தை டெபாசிட் செய்ய முயன்ற 2 பேர் கைது

Published On 2023-05-27 03:24 GMT   |   Update On 2023-05-27 03:24 GMT
  • மகாதேவ் காட் பகுதியில் மாவட்ட ரிசர்வ் போலீஸ் படையினர் நக்சலைட்டுகளுக்கு எதிராக வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
  • பணத்தை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரையும் கைது செய்தனர்.

பிஜாப்பூர்:

2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதால், மக்கள் தங்களிடம் இருக்கும் இந்த நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட மகாதேவ் காட் பகுதியில் மாவட்ட ரிசர்வ் போலீஸ் படையினர் நக்சலைட்டுகளுக்கு எதிராக வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த 2 பேர், போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். உடனே அவர்களை துரத்திப்பிடித்த போலீசார், அவர்களை சோதனையிட்டனர். இதில் அவர்களிடம் ரூ.6 லட்சத்துக்கு 2,000 ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் 11 வங்கி கணக்குப்புத்தகங்களும் இருந்தன.

இந்த பணம் நக்சலைட்டு தளபதி மல்லேசுக்கு சொந்தமானது எனவும், அதை வங்கியில் டெபாசிட் செய்வதற்காக கொண்டு சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. ஏற்கனவே ரூ.2 லட்சத்தை வங்கியில் டெபாசிட் செய்ததையும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரையும் கைது செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News