இந்தியா
அசாமில் ஏழுமலையான் கோவில்: TTD உடன் ஹிமாந்தா பிஸ்வா சர்மா ஆலோசனை
- திருமலை திருப்பதி தேவஸ்தானபோர்டு சேர்மன் தலைமையிலான குழு அசாம் சென்றிருந்தது.
- கவுகாத்தியில் கோவில் கட்டுவது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளனர்.
திருமலை திருப்பதி தேவஸ்தானபோர்டு சேர்மன் பி.ஆர். நாயுடு தலைமையிலான குழு நேற்று அசாம் சென்று, அம்மாநில முதல்வரான ஹிமாந்தா பிஸ்வா சர்மாவை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளது.
அசாம் தலைநகர் கவுகாத்தியில் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோவில் கட்டுவது தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தியதாக, முதலமைச்சர் அலுவலகம் செய்து வெளியிட்டுள்ளது.