இந்தியா
null
டைம்ஸ் இதழ் வெளியிட்ட 100 நன்கொடையாளர்கள் பட்டியலில் இடம்பிடித்த முகேஷ் அம்பானி
- 2024 ஆம் ஆண்டில் மட்டும் முகேஷ் அம்பானி ரூ.407 கோடி நன்கொடை அளித்துள்ளார்.
- விப்ரோ முன்னாள் தலைவர் ஆசிம் பிரேம்ஜி இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான உலகின் மிகச்சிறந்த 100 நன்கொடையாளர்கள் பட்டியலை டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீடா அம்பானி, விப்ரோ முன்னாள் தலைவர் அசீம் பிரேம்ஜி, ஜெரோதா இணை நிறுவனர் கமல்நாத் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
2024 ஆம் ஆண்டில் மட்டும் முகேஷ் அம்பானி ரூ.407 கோடி நன்கொடை அளித்துள்ளார்.
விப்ரோ நிறுவனத்தில் இருந்து அசீம் பிரேம்ஜி தொடங்கிய அறக்கட்டளைக்கு 29 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான பங்குகள் வழங்கப்பட்டுள்ளது.