பிறப்பு சான்றிதழ் கேட்பவர்களை கட்டி வைத்து., மேற்கு வங்க மக்களுக்கு அபிஷேக் பானர்ஜி அட்வைஸ்
- சான்றிதழ்களை கொடுக்கச் சொல்லுங்கள். அதன்பின் பிரசாரத்திற்கு அனுமதியுங்கள்.
- மரங்கள், மின்சார கம்பங்களில் கட்டி வையுங்கள். ஆனால், உங்களுடைய கைகளை நீட்டி விடாதீர்கள்.
இந்திய தேர்தல் ஆணையம் 2ஆம் கட்டமாக 12 மாநிலங்களில் SIR பணி மேற்கொள்ளப்படுவதாக அறிவித்துள்ளது. இதற்கான பணி நேற்றில் இருந்து தொடங்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியில் பெயர் தக்கவைக்க, சேர்க்க பிறப்பு சான்றிழல் தேவை என தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலானவர்களிடம் பிறப்பு சான்றிதழ் இருக்காது. மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே பலர் பிறந்திருப்பார்கள். இதனால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், SIR பணியை கடுமையாக எதிர்க்கின்றனர்.
இந்த நிலையில்தான், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யான அபிஷேக் பானர்ஜி, பாஜக உள்ளூர் தலைவர்கள் பிரசாரம் செய்து வந்தால், அவர்களிடம் பிறப்பு சான்றிதழ்களை கேளுங்கள் என மக்களுக்கு அட்வைஸ் வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக அபிஷேக் பானர்ஜி கூறியதாவது:-
பிரசாரத்திற்கான லோக்கல் பாஜக தலைவர்கள் உங்கள் இடங்களுக்குள் நுழைந்தால், அவர்களை தடுத்து நிறுத்துங்கள். பின்னர் அவர்களுடைய தந்தை மற்றும் தாத்தா ஆகியோரின் பிறப்பு சான்றிதழ்களை காண்பிக்க சொல்லுங்கள்.
சான்றிதழ்களை கொடுக்கச் சொல்லுங்கள். அதன்பின் பிரசாரத்திற்கு அனுமதியுங்கள். அது வரைக்கும் அவர்களை கட்டி வையுங்கள். மரங்கள், மின்சார கம்பங்களில் கட்டி வையுங்கள். ஆனால், உங்களுடைய கைகளை நீட்டி விடாதீர்கள். நான் அமைதியை நம்புகிறேன். அவர்களை சான்றிதழ்களை கொடுக்க சொல்லுங்கள். அதன்பின் அவிழ்த்து விடுங்கள். அமித் ஷா மற்றும் பாஜக அரசு உங்களிடம் கேட்பதை, முதலில் அவர்களை காண்பிக்க சொல்லுங்கள்.
இவ்வாறு அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையம் ஆதார்டு கார்டு உள்பட 12 ஆவணங்களை கேட்கிறது. அதில் ஒன்றுதான் பிறப்பு சான்றிதழ் ஆகும்.