இந்தியா

மும்பையில் 323 சதுர அடி பிளாட்டின் விலை ரூ.75 லட்சம்... வைரலான வீடியோவால் அதிர்ச்சி

Published On 2024-02-03 14:19 IST   |   Update On 2024-02-03 14:19:00 IST
  • ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் புறா கூண்டு போல இந்த பிளாட் உள்ளது.
  • கழிவறைகள், குளிப்பதற்கு போதுமானதாக இல்லை.

மும்பையில் உள்ள ஒரு பெண் 2பிஎச்கே எனப்படும் பிளாட்டை காட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், 323 சதுர அடி பரப்பளவில் 2பிஎச்கே பிளாட் ஒன்றை அந்த பெண் காட்டுகிறார். 23 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் அமைந்துள்ள அந்த பிளாட்டின் விலை ரூ.75 லட்சம் என கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி 7 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்தது.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்தனர். ஒரு பயனர், இதை 2பிஎச்கே என்று அபத்தமாக அழைப்பதற்கு பதிலாக அவர்கள் அதை ஒரு ஸ்டூடியோ வீடு என கூற வேண்டும். இது பேச்சுலர்களின் வசிப்பிடமாக இருக்க வாய்ப்புள்ளது. இதில் இவ்வளவு முதலீடு செய்வது வீண் விரயம். இந்த 75 லட்சம் ரூபாய்க்கு ஐதராபாத்தில் 1000 சதுர அடியில் 2பிஎச்கே கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு பயனர் தனது பதிவில், ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் புறா கூண்டு போல இந்த பிளாட் உள்ளது. கழிவறைகள், குளிப்பதற்கு போதுமானதாக இல்லை. இதை வாங்குபவர்கள் மழைக்காலத்தில் கண்ணீர் விட்டு அழ நேரிடும் என பதிவிட்டுள்ளார். இதைப்போன்று பல பயனர்களும் தங்களது விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News