இந்தியா

விண்வெளியில் இருந்து இந்தியா பார்க்க இப்படித் தான் இருக்கும்.. வீடியோவை பகிர்ந்த சுபான்ஷு சுக்லா!

Published On 2025-08-22 17:25 IST   |   Update On 2025-08-22 17:25:00 IST
  • சர்வதேச விண்வெளி மையத்தில் விவசாயம் உட்பட பல ஆய்வுகளை மேற்கொண்டனர்.
  • சர்வதேச விண்வெளி மையம், இந்தியப் பெருங்கடலில் இருந்து தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகர்கிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோவின் லட்சிய திட்டமான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 'ககன்யான்' திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர் சுபான்ஷு சுக்லா.

இவர், நாசா மற்றும் 'ஆக்சியம் ஸ்பேஸ்' என்னும் தனியார் நிறுவனம் சார்பில் 'ஆக்சியம்- 4' திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி மையத்துக்கு, 3 பேருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

கடந்த ஜூன் 25ல் அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து புறப்பட்ட இவர்கள் சர்வதேச விண்வெளி மையத்தை மறுநாள் அடைந்தனர். கடந்த ஜூலை 15-ல் பூமிக்கு திரும்பினர். சர்வதேச விண்வெளி மையத்தில் விவசாயம் உட்பட பல ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இந்தப் பயணம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமை சுபான்ஷு சுக்லாவுக்கு கிடைத்தது. இவர் இந்த வார தொடக்கத்தில் இந்தியா வருகை தந்தார். அப்போது பிரதமர் மோடியை சந்தித்தார்.

இந்நிலையில் விண்வெளியில் சவர்தேச விண்வெளி மையத்தில் இருந்து படம்பிடிக்கப்பட்ட இந்தியாவின் Time lapse வீடியோவை சுபான்ஷு சுக்லா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தனது பதிவில், புவி சுற்றுவட்டப் பாதையில் இருந்தபோது, இந்தப் பயணத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள படங்களையும் வீடியோக்களையும் எடுத்தேன்.

இது விண்வெளியில் இருந்து பாரதத்தின் டைம்லேப்ஸ் வீடியோ. சர்வதேச விண்வெளி மையம், இந்தியப் பெருங்கடலில் இருந்து தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகர்கிறது" என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News