இந்தியா

காக்கா திருடிய நகை -மீண்டும் கிடைத்த அதிசயம்

Published On 2025-07-15 20:53 IST   |   Update On 2025-07-15 20:53:00 IST
  • மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு காக்கை தங்க வளையலை திருடி அதன் கூட்டில் வைத்திருந்தது.
  • மரம் ஏறும் தொழிலாளியான அன்வர் என்பவர் காக்கையின் கூட்டில் இந்த தங்க வளையலை கண்டெடுத்தார்.

கேரளாவில் மஞ்சேரி என்ற கிராமத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு காக்கை தங்க வளையலை திருடி அதன் கூட்டில் வைத்திருந்தது.

மரம் ஏறும் தொழிலாளியான அன்வர் என்பவர் காக்கையின் கூட்டில் இந்த தங்க வளையலை கண்டெடுத்தார்.

இதைத் தொடர்ந்து, அவர் இது குறித்து உள்ளூர் நூலகத்தில் அறிவிப்பு பலகை வைத்தார். அதனை கண்ட ஹரிதா என்ற பெண் வளையல் வாங்கிய பில்லையும் அதை அணிந்திருந்த போட்டோவையும் காட்டி வளையலை பெற்றுச் சென்றார்.

இந்த சம்பவம் ஒரு அதிசயமாகவும், ஆச்சரியமான நிகழ்வாகவும் பேசப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News