இந்தியா

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு

Published On 2025-12-03 14:05 IST   |   Update On 2025-12-03 14:05:00 IST
  • இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.89.96 ஆக இருந்தது.
  • இந்தியா- அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் தாமதம்.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் முதல் முறையாக ரூ.90-யை இன்று கடந்துள்ளது. நேற்று வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு ரூ.89.92 வரை சென்றது. இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.89.96 ஆக இருந்தது.

காலை 10 மணியளவில் டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு வரலாறு காணாத வகையில் ரூ.90.16-க்கு சரிந்தது. வர்த்தகப் பற்றாக் குறை, இந்தியா- அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் தாமதம் ஆகியவை ரூபாய் வீழ்ச்சிக்கு காரணமாக கருதப்படுகிறது.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்யும்போது, நமது அன்னிய செலாவணி அதிகரிக்கும். அதேநேரம் இப்போது உலகின் மற்ற நாடுகளை விட இந்திய பங்குச்சந்தை உச்சத்தில் இருப்பதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை வெளியே எடுக்கிறார்கள்.

இதனால் அன்னிய செலாவணி குறைகிறது. இதுவும் ரூபாய் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

Tags:    

Similar News