இந்தியா
எலெக்ட்ரிக் ஆட்டோவை சோலார் ஆட்டோவாக மாற்றிய டிரைவர்
- குறைவான பேட்டரி திறன் மற்றும் சார்ஜிங் பிரச்சினைகளால் சரியாக ஆட்டோ ஓட்ட முடியவில்லை.
- தினமும் ரூ.1,500 வரை சம்பாதிக்க முடிவதாகவும் மகிழ்ச்சியுடன் கூறினார்.
ஒடிசாவை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் பட்ரா. 35 வயதான இவர் ஒடிசா தலைநகர் புவனேஸ்வர் அருகே நாயாகார்க் பகுதியில் கடந்த 15 வருடங்களாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் தனது 3 சக்கர எலெக்ட்ரிக் ஆட்டோவை சோலார் ஆட்டோவாக மாற்றி உள்ளார். ஆரம்பத்தில் டீசலில் இயங்கும் ஆட்டோவை ஓட்டிய இவருக்கு தினமும் ரூ.400 வரை எரிபொருள் செலவாகியதால் கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு எலெக்ட்ரிக் ஆட்டோ வாங்கி உள்ளார்.
ஆனால் குறைவான பேட்டரி திறன் மற்றும் சார்ஜிங் பிரச்சினைகளால் சரியாக ஆட்டோ ஓட்ட முடியவில்லை. அப்போது அவரது 11 வயது மகனின் அறிவுரைப்படி எலெக்ட்ரிக் ஆட்டோவை சோலார் ஆட்டோவாக மாற்றி உள்ளார். இதன்மூலம் சிங்கிள் சார்ஜில் 140 கிலோ மீட்டர் தூரம் வரை ஆட்டோ இயங்குவதாகவும், இதனால் தினமும் ரூ.1,500 வரை சம்பாதிக்க முடிவதாகவும் மகிழ்ச்சியுடன் கூறினார்.