இஸ்ரோ விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்துகிறது- ராகுல் காந்தி
- விண்ணில் 2 செயற்கைக் கோள்களை டாக்கிங் முறையில் இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ வெற்றி கண்டுள்ளது.
- 2 செயற்கைக்கோள்களை இணைக்கும் ஒருங்கிணைப்பு தொழில்நுட்பத்தை அறிந்த 4 நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
இஸ்ரோ சார்பில் கடந்த டிசம்பர் 30ம் தேதி அன்று ஸ்பேடேக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய 2 செயற்கைக்கோள்களும் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலம் ஏவப்பட்டு விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.
இதைதொடர்ந்து, விண்வெளியில் 2 யெற்கைக்கோள்களை இணைக்கும் வகையில், இஸ்ரோ செயல்படுத்தி வந்த 'ஸ்பேடெக்ஸ்' திட்டம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணில் 2 செயற்கைக் கோள்களை டாக்கிங் முறையில் இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ வெற்றி கண்டுள்ளது.
2 செயற்கைக்கோள்களை இணைக்கும் ஒருங்கிணைப்பு தொழில்நுட்பத்தை அறிந்த 4 நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் வெற்றிக்கு உழைத்த விஞ்ஞானிகளுக்கு புதிய இஸ்ரோ தலைவர் நாராயணன் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஸ்பேடெக்ஸின் வரலாற்று வெற்றிக்காக உழைத்த இஸ்ரோவின் சிறந்த விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள். இதன் மூலம் இந்தியா விண்வெளி டாக்கிங் தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற நான்காவது நாடாக மாறியுள்ளது.
இந்த மைல்கல் இந்தியாவின் திறன்களில் ஒரு குறிப்பிடத்தக்க பாய்ச்சலைக் குறிக்கிறது. இதன் வெற்றி சிறந்த விண்வெளி திட்டங்கள் மற்றும் பணிகளுக்கு வழி வகுக்கிறது.
விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பும் புதுமையும் தொடர்ந்து உலகை ஊக்குவிப்பதோடு, ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்துகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.