இந்தியா

பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது பற்றி பேசிவிட்டு பெண் கவர்னருக்கு அழைப்பு விடுக்காமல் உள்ளார்- சந்திரசேகரராவை சாடிய தமிழிசை

Published On 2023-04-16 06:16 GMT   |   Update On 2023-04-16 06:16 GMT
  • எங்கள் அம்பேத்கர் ஜியின் மகத்தான ஆளுமையில் நான் வந்து பங்கேற்றிருப்பேன்.
  • பெண் கவர்னருக்கு அழைப்பு இல்லை. அது ஒரு பெரிய நிகழ்வு. எனக்கான அழைப்பிதழ் எதுவும் இல்லை.

தெலுங்கானா அரசு சார்பில் ஐதராபாத்தில் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு நாட்டிலேயே உயரமான 125 அடி உயரம் கொண்ட அம்பேத்கர் வெண்கல சிலை திறப்பு விழா நடந்தது.

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் நிகழ்ச்சியில் பங்கேற்று அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசும்போது பெண்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று கூறினார்.

இதுகுறித்து தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியிருப்பதாவது:-

அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது பற்றி சந்திரசேகர ராவ் பேசினார்.

ஆனால் ஒரு பெண் கவர்னருக்கு அழைப்பு இல்லை. அது ஒரு பெரிய நிகழ்வு. எனக்கான அழைப்பிதழ் எதுவும் இல்லை.

எனக்கு அழைப்பிதழ் கிடைத்திருந்தால், எங்கள் மாண்புமிகு அம்பேத்கர் ஜியின் மகத்தான ஆளுமையில் நான் வந்து பங்கேற்றிருப்பேன்.

அவர் நமது அரசியலமைப்பின் தந்தை மட்டுமல்ல, நாட்டின் வளர்ச்சிக்காகவும், பெண்கள் அதிகாரம் பெறுவதற்காகவும் அவர் தனது வார்த்தைகளை முன்வைத்துள்ளார்.

நேற்றைய தினம் அம்பேத்கர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன் என்றார்.

Tags:    

Similar News