இந்தியா

புற்றுநோயுடன் போராடும் பெண்ணுக்கு மொட்டையடித்த கணவர்

Published On 2023-09-04 10:50 IST   |   Update On 2023-09-04 10:50:00 IST
  • இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள ஒரு வீடியோவில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அவரது கணவர் மொட்டையடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
  • வீடியோ பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே 17 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் பெரிய வலிகளை அனுபவித்து கொண்டிருப்பார்கள். இந்த நோய் பாதித்தவர்களுக்கு கொடுக்கப்படும் கீமோதெரபி போன்ற சிகிச்சைகளால் அவர்களுக்கு கொத்து கொத்தாக முடி கொட்டும் என்பதால் அவர்கள் முடியை மொட்டையடித்து கொள்வார்கள்.

உணர்வு ரீதியாக இந்த வலியை கடப்பது சற்று கடினமானது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள ஒரு வீடியோவில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அவரது கணவர் மொட்டையடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. புற்றுநோயை எதிர்த்து போராடும் மனைவிக்கு ஆதரவாக கணவர் ஒருவர் அவரது தலையை மொட்டையடிக்கும் காட்சிகள் அதில் உள்ளது.

அப்போது அந்த பெண் கதறி அழும் காட்சிகள் காண்போர் மனதை உருக்குவதாக உள்ளது. பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே 17 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. இதை பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். சிலர் அந்த பெண் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும், நீங்கள் புற்றுநோயை முறியடிப்பீர்கள் என்றும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

Tags:    

Similar News