இந்தியா
குவாரிக்குள் கார் கவிழ்ந்து 3 பேர் பலி
- தடுப்புச்சுரை இடித்துச்சென்று குவாரிக்குள் கார் கவிழ்ந்தது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்ற
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கெம்போடிஞ்சாமக்கல் பகுதியை சேர்ந்தவர்கள் ஷியாம், ஜார்ஜ், டிட்டோ. இவர்கள் 3 பேரும் குழிக்காட்டுச்சேரியில் இருந்து புத்தன்சிறைக்கு காரில் சென்றனர். அப்போது அவர்களது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, ரோட்டோரத்தில் இருந்த கல் குவாரிக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காருக்குள் இருந்த ஷியாம், ஜார்ஜ், டிட்டோ ஆகிய 3 பேரும் பரிதாபமாக இறந்தனர்.
குவாரிக்குள் மூழ்கி கிடந்த அவர்களது உடலை தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.