இந்தியா

சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்திற்காக காத்து நின்ற காட்சி.

சபரிமலையில் மண்டல பூஜை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நாளை தொடக்கம்

Published On 2023-11-19 09:17 IST   |   Update On 2023-11-19 09:17:00 IST
  • 13 மையங்கள் அமைக்கப்பட்ட போதிலும் அனைத்து மையங்களிலும் முன்பதிவுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
  • 3-வது நாளான நேற்று 45 ஆயிரம் பக்தர்கள் ஒரே நாளில் ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

திருவனந்தபுரம்:

மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16-ந்தேதி திறக்கப்பட்டது. முதல் நாளில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். முன்பதிவு செய்ய முடியாத பக்தர்கள் வசதிக்காக நிலக்கல்லில் உடனடி தரிசன முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 13 மையங்கள் அமைக்கப்பட்ட போதிலும் அனைத்து மையங்களிலும் முன்பதிவுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

3-வது நாளான நேற்று 45 ஆயிரம் பக்தர்கள் ஒரே நாளில் ஐயப்பனை தரிசனம் செய்தனர். இந்த நிலையில் வருகிற டிசம்பர் 27-ந்தேதி நடைபெறும் மண்டல பூஜை தின தரிசனத்திற்கான முன்பதிவு நாளை (20-ந்தேதி) தொடங்குகிறது என தேவஸ்தான தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

வயதானவர்கள் மற்றும் சிறுவர், சிறுமிகளுக்கு சிறப்பு தரிசன வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Tags:    

Similar News