இந்தியா

திருப்பதியில் ரூ.300 கட்டண ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் நாளை வெளியீடு

Published On 2023-01-08 09:57 IST   |   Update On 2023-01-08 09:57:00 IST
  • திருப்பதியில் நேற்று 62,856 பேர் தரிசனம் செய்தனர். 22,115 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
  • ரூ.2.21 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

திருப்பதி:

திருப்பதியில் ஜனவரி 12-ந்தேதி முதல் 31-ந்தேதி வரைக்கான ரூ.300 கட்டண ஆன்லைன் தரிசன முன்பதிவு டிக்கெட்டுகள் நாளை திங்கட்கிழமை காலை 10 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

இந்த டிக்கெட்டுகளை பக்தர்கள் www.tiruptibalaji.ap.gov.in என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதியில் நேற்று 62, 856 பேர் தரிசனம் செய்தனர். 22,115 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 2.21 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வசதியாக தேவஸ்தானம் சார்பில் பக்தர்கள் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு 6 ஆயிரம் அறைகள் வாடகைக்கு விடப்பட்டு வந்தது.

சேதம் அடைந்த அறைகள் ரூ.110 கோடி செலவில் தேவஸ்தானம் சார்பில் சீரமைக்கப்பட்டன. மேலும் பக்தர்கள் தங்கும் காட்டேஜ் கெஸ்ட் ஹவுஸ்களில் ஏ.சி, வெந்நீர், மற்றும் நவீன வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தங்கும் அறை வாடகை 3 முதல் 4 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அறை வாடகை உயர்த்தப்பட்டதற்கு தெலுங்கு தேசம், பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

மேலும் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக கட்டிட அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதேபோல் அறை கட்டணத்தை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News