திருவனந்தபுரம் அருகே டிரான்ஸ்பார்மரில் ஏறிய மலைப்பாம்பு மின்சாரம் பாய்ந்து இறந்தது
- மின்சாரம் பாய்ந்து பாம்பு இறந்திருப்பதை கண்டு பிடித்தனர்.
- மின்சாரத்தை துண்டித்த பின்பு டிரான்ஸ்பார்மரில் இறந்து கிடந்த மலைப்பாம்பை மின்வாரிய ஊழியர்கள் மீட்டனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த பத்தினம்திட்டா பகுதியில் நாரங்கானம் என்ற இடத்தில் சாலையோரம் ஒரு மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது.
இந்த பகுதி எப்போதும் புதர் மண்டி காணப்படும். நேற்று இந்த வழியாக சென்றவர்கள், டிரான்ஸ்பார்மரின் மேல் பகுதியில் மலைப்பாம்பு ஒன்று இறந்து கிடந்ததை கண்டனர். உடனே அவர்கள் இதுபற்றி போலீசாருக்கும், மின்வாரிய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் விரைந்து வந்து பார்த்த போது, டிரான்ஸ்பார்மரையொட்டி வளர்ந்து நின்ற செடி, கொடிகள் வழியாக மலைப்பாம்பு டிரான்ஸ்பார்மரில் ஏறியது தெரியவந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து பாம்பு இறந்திருப்பதை கண்டு பிடித்தனர்.
இதையடுத்து அந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்த பின்பு டிரான்ஸ்பார்மரில் இறந்து கிடந்த மலைப்பாம்பை மின்வாரிய ஊழியர்கள் மீட்டனர். பின்னர் அது வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.