இந்தியா

ஆம்லெட் பொடி தயாரித்த கேரள என்ஜினீயர்

Published On 2023-08-26 05:10 GMT   |   Update On 2023-08-26 05:10 GMT
  • ஆம்லெட் பொடியை தயாரிக்கக்கூடிய உற்பத்தி எந்திரத்தை, அவரே கண்டுபிடித்துள்ளார்.
  • 5 வகையிலான ஆம்லெட் பொடி தயாரிக்கப்படுகிறது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் அர்ஜூன். சிவில் என்ஜினீயரான இவர் உடனடியாக ஆம்லெட் தயாரிக்கும் வகையில் ஆம்லெட் பொடியை கண்டுபிடித்துள்ளார்.

அந்த ஆம்லெட் பொடியை தயாரிக்கக்கூடிய உற்பத்தி எந்திரத்தை, அவரே கண்டுபிடித்துள்ளார். அவரது கண்டுபிடிப்புக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. ஆம்லெட் பொடியை தயாரிக்க நிறுவனத்தையும் அர்ஜூன் தொடங்கியிருக்கிறார். அங்கு 5 வகையிலான ஆம்லெட் பொடி தயாரிக்கப்படுகிறது.

அந்த ஆம்லெட் பொடியை தண்ணீரில் கலந்து சூடான பாத்திரத்தில் ஊற்றி உடனடியாக ஆம்லெட் தயாரிக்கலாம் என்று அர்ஜூன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News