இந்தியா

மகள் காதல் திருமணம் செய்ததால் தாய் தூக்கிட்டு தற்கொலை

Update: 2023-03-22 05:41 GMT
  • எதிர்ப்பையும் மீறி மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் நிர்மலா யாருடனும் பேசாமல் விரக்தியில் இருந்து வந்தார்.
  • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நிர்மலா பிணத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் குகட் பள்ளியை சேர்ந்தவர் சீனிவாச ராவ். இவர் ஐதராபாத்தில் உள்ள அரசு அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நிர்மலா (வயது 45). தம்பதிக்கு சைதேஜா என்ற மகனும், நிஹாரிகா என்ற மகளும் உள்ளனர்.

நிஹாரிகா கல்லூரியில் படிக்கும் போது தன்னுடன் படிக்கும் ராஜ்குமார் என்பவரை காதலித்து வந்தார். நிஹாரிகாவின் காதல் விவகாரம் அவரது பெற்றோருக்கு தெரிய வந்தது.

அவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த சில நாட்களுக்குகளுக்கு முன்பு நிஹாரிகா வீட்டை விட்டு வெளியேறி ராஜ்குமாருடன் திருமணம் செய்து கொண்டார்.

எதிர்ப்பையும் மீறி மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் நிர்மலா யாருடனும் பேசாமல் விரக்தியில் இருந்து வந்தார். நேற்று காலை சீனிவாச ராவ் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார்.

சைதேஜா வெளியே சென்று விட்டு மாலை மீண்டும் வீடு திரும்பினார். அப்போது படுக்கை அறை உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகம் அடைந்த சைதேஜா இது குறித்து தனது தந்தைக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார்.

வீட்டிற்கு விரைந்து வந்த சீனிவாச ராவ் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்குள்ள மின்விசிறியில் நிர்மலா தூக்கில் பிணமாக தூங்கினார். இதுகுறித்து சீனிவாசராவ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நிர்மலா பிணத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நிர்மலா எழுதி வைத்திருந்த கடிதத்தை பறிமுதல் செய்தனர்.

அதில் எழுதி இருப்பதாக போலீசார் கூறியதாவது, தனது மகள் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்து கொண்டதால் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்வதாகவும் தனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என கடிதத்தில் எழுதி உள்ளார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News