இந்தியா

பாலியல் புகார் கொடுத்த ஆசிரியையை தாக்கியதாக எல்தோஸ் எம்.எல்.ஏ. மீது மேலும் ஒரு வழக்கு

Published On 2022-10-26 16:18 IST   |   Update On 2022-10-26 16:18:00 IST
  • காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எல்தோஸ் குன்னப்பிள்ளை மீது ஆசிரியை ஒருவர் பாலியல் புகார் கூறியது கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • புகாரின் பேரில் கடந்த 22-ந் தேதி எல்தோஸ் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் பெரும்பாவூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் எல்தோஸ் குன்னப்பிள்ளை.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் மீது ஆசிரியை ஒருவர் பாலியல் புகார் கூறியது கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புகாரின் பேரில் கடந்த 22-ந் தேதி எல்தோஸ் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் கோர்ட்டு உத்தரவுப்படி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என போலீஸ் தரப்பில் புகார் கூறப்பட்டது.

இந்த நிலையில் புகார் கூறிய ஆசிரியையை, எல்தோஸ் எம்.எல்.ஏ. தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. மேலும் அந்தப் பெண்ணை, அவமரியாதை செய்ததாகவும் போலீசில் புகார் கூறப்பட்டுள்ளது.

அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் எல்தோஸ் மீது மற்றொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News