இந்தியா

பைக் வாங்கி தர மறுத்ததால் ஆத்திரம்- தாயை இரும்பு தடியால் அடித்து கொலை செய்த மகன் கைது

Published On 2023-02-06 18:56 IST   |   Update On 2023-02-06 18:56:00 IST
  • பிரேம் நகரில் உள்ள வீட்டில் ஃபரிதா (75) என்ற பெண்ணின் ரத்தக் கறை படிந்த உடல் கண்டெடுக்கப்பட்டது.
  • அப்சார் கான் இரும்பு கம்பியை எடுத்து தாய் என்றும் பாராமல் அவரைத் தாக்கி கொலை செய்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மோட்டார் பைக் வாங்கி தர மறுத்ததால் தாயைக் கொன்றதாக 26 வயது இளைஞர் அப்சர் கான் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், குற்றச்செயலுக்கு பயன்படுத்திய ஆயுதம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜனவரி 17ம் தேதி, பரேலி மாவட்டம் பிரேம் நகரில் உள்ள வீட்டில் ஃபரிதா (75) என்ற பெண்ணின் ரத்தக் கறை படிந்த உடல் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தியதில், அப்சர் கான் அவரது வளர்ப்பு மகன் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், "தாய்- மகன் இருவருக்கும் மோட்டார் பைக் வாங்குவது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அப்சார் கான் இரும்பு தடியை எடுத்து தாய் என்றும் பாராமல் அவரைத் தாக்கி கொலை செய்துள்ளார்" என்றார்.

Tags:    

Similar News