இந்தியா

அதானி விவகாரத்தில் மோடி பதில் அளிக்க வேண்டும்- மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல்

Published On 2023-02-06 13:25 IST   |   Update On 2023-02-06 17:45:00 IST
  • அதானி குழும நிறுவனத்தின் புகார் பற்றி மத்திய அரசு விவாதிக்க மறுப்பதோடு அதை அவை பதிவுக்கு கொண்டு வரக் கூடாது என நினைக்கிறது.
  • ஜனாதிபதி உரை மீதான விவாதங்களுக்கு தயாராக இருக்கிறோம்.

புதுடெல்லி:

அதானி குழும முறைகேடு விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டன.

போராட்டத்திற்கு பிறகே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அதானி குழும விவகாரம் குறித்து பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பதில் அளிக்க வேண்டும். ஜனாதிபதி உரை மீதான விவாதத்தை காட்டிலும் பிரதமர் முதலில் பதில் அளிக்க வேண்டும்.

அதானி குழும நிறுவனத்தின் புகார் பற்றி மத்திய அரசு விவாதிக்க மறுப்பதோடு அதை அவை பதிவுக்கு கொண்டு வரக் கூடாது என நினைக்கிறது. ஜனாதிபதி உரை மீதான விவாதங்களுக்கு தயாராக இருக்கிறோம். அதற்கான முக்கியத்துவத்தையும் தருகிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News