இந்தியா

அனைத்து பள்ளிகளையும் மாணவ-மாணவிகள் சேர்ந்து படிக்கும் பள்ளிகளாக மாற்ற வேண்டும்: மாநில குழந்தைகள் நல ஆணையம் உத்தரவு

Published On 2022-07-22 05:42 GMT   |   Update On 2022-07-22 05:42 GMT
  • அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.
  • பள்ளிகள் அனைத்தையும் அடுத்த கல்வி ஆண்டு முதல் இருபாலரும் சேர்ந்து படிக்கும் பள்ளியாக மாற்ற வேண்டும்.

திருவனந்தபுரம்:

கேரளாவில் பாலின சமத்துவத்தை பள்ளி பருவத்தில் இருந்தே கற்று தரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இது தொடர்பாக மாநில குழந்தைகள் உரிமை ஆணையம் ஒரு உத்தரவு பிறப்பித்து உள்ளது. அதில் அடுத்த கல்வி ஆண்டு முதல் கேரளாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளை சேர்த்து கொள்ள வேண்டும்.

இனி இருபாலருக்கும் தனித்தனியாக பள்ளிகள் இருக்க கூடாது. அதற்கேற்ப அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும், என உத்தரவிட்டு உள்ளது.

கேரளாவில் தற்போது 280 பெண்கள் பள்ளிகளும், 164 ஆண்கள் பள்ளியும் உள்ளது. இந்த பள்ளிகள் அனைத்தையும் அடுத்த கல்வி ஆண்டு முதல் இருபாலரும் சேர்ந்து படிக்கும் பள்ளியாக மாற்ற வேண்டும்.

இது தொடர்பாக மாநில கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர். அதன்பிறகு இந்த உத்தரவை அமல் படுத்துவது குறித்து அரசு முடிவு செய்யும் என தெரிகிறது.

Tags:    

Similar News