ஐதராபாத்தில் ஆண் உறுப்பை அறுத்து மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை
- தீட்சித் ரெட்டியின் பெற்றோர் நேற்று முன்தினம் வெளியூருக்கு சென்று இருந்தனர்.
- தீட்சித் ரெட்டி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அந்த நேரத்தில் தீட்சித்ரெட்டி தனது ஆண் உறுப்பை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்தார்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர் பகுதியான பாப்பிரெட்டி நகரை சேர்ந்தவர் தீட்சித் ரெட்டி (வயது 21). இவர் செகந்திராபாத்தில் உள்ள காந்தி மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு டாக்டருக்கு படித்து வந்தார்.
இந்த நிலையில் தீட்சித் ரெட்டிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். தீட்சித் ரெட்டிக்கு மனநல மருத்துவர்கள் கவுன்சிலிங் கொடுத்து வந்தனர்.
தீட்சித் ரெட்டியின் பெற்றோர் நேற்று முன்தினம் வெளியூருக்கு சென்று இருந்தனர்.
தீட்சித் ரெட்டி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அந்த நேரத்தில் தீட்சித்ரெட்டி தனது ஆண் உறுப்பை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்தார்.
வெளியூர் சென்றிருந்த அவரது பெற்றோர் நேற்று காலை வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் ஜன்னலை திறந்து பார்த்தபோது தீட்சித் ரெட்டி ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தார்.
இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்றனர். அவரது பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.