இந்தியா

குஜராத், இமாச்சல் பிரதேச சட்டசபை தேர்தல் தேதி இன்று அறிவிப்பு

Published On 2022-10-14 11:15 IST   |   Update On 2022-10-14 11:15:00 IST
  • இன்று பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் கமிஷனின் செய்தியாளர் சந்திப்பு நடக்கிறது.
  • இரண்டு மாநிலங்களிலும் தலைமை தேர்தல் அதிகாரிகள் சமீபத்தில் சென்று தேர்தல் பணி குறித்து ஆய்வு செய்து இருந்தனர்.

182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டசபையின் பதவி காலம் பிப்ரவரி 18-ந்தேதி முடிவடைகிறது. இதே போல 68 இடங்களை கொண்ட இமாச்சலபிரதேச சட்டசபையின் பதவி காலம் ஜனவரி 8-ந்தேதி முடிகிறது.

இதைத்தொடர்ந்து குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களுக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்து உள்ளது. அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்தது.

இந்த நிலையில் குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கலாம் என்று தெரிகிறது.

இன்று பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் கமிஷனின் செய்தியாளர் சந்திப்பு நடக்கிறது. இதில் குஜராத், இமாச்சலபுரதேச மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவிக்கிறது. இந்த இரண்டு மாநிலங்களிலும் தலைமை தேர்தல் அதிகாரிகள் சமீபத்தில் சென்று தேர்தல் பணி குறித்து ஆய்வு செய்து இருந்தனர்.

சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் குஜராத், இமாச்சல பிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சி நடை பெற்று வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு இந்த இரு மாநிலங்களிலும் அரசியல் கட்சி தலைவர்கள் பிரசார களத்தில் குதித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

Tags:    

Similar News