இந்தியா

பழுதான லிப்டில் கைக்குழந்தையுடன் தவித்த பெண்ணை காப்பாற்றிய வாலிபர்- வீடியோ வைரலாகி பாராட்டுக்கள் குவிகிறது

Published On 2023-08-12 11:11 IST   |   Update On 2023-08-12 11:11:00 IST
  • வீடியோவில் கொரியர் கொடுப்பதற்காக வந்த வாலிபர் ஒருவர் லிப்டில் பயணம் செய்கிறார்.
  • வீடியோவை 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

ஆபத்தில் சிக்கிய நேரத்திலும் அடுத்தவர்களுக்கு உதவும் எண்ணம் எல்லோருக்கும் வராது. ஆனால் பழுதான லிப்டில் கைக்குழந்தையுடன் சிக்கிய பெண்ணை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு ஊழியர் காப்பாற்றிய வீடியோ இன்ஸ்டாகிராமில் பரவி வருகிறது.

அந்த வீடியோவில் கொரியர் கொடுப்பதற்காக வந்த வாலிபர் ஒருவர் லிப்டில் பயணம் செய்கிறார். அவருடன் லிப்டில் ஒரு பெண் தனது கைக்குழந்தையுடன் பயணம் செய்கிறார். அப்போது திடீரென லிப்ட் பாதியிலேயே நின்று விட அந்த பெண் பதட்டப்படுகிறார். இதை பார்த்த கொரியர் ஊழியர் அந்த பெண்ணின் பயத்தை போக்கும் வகையில் கைக்குழந்தையையும், அந்த பெண்ணையும் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டதோடு, லிப்ட்டின் பட்டனை தொடர்ந்து அழுத்தி கதவை திறக்க முயற்சிக்கிறார். அவரது நீண்ட முயற்சிக்கு பிறகு லிப்டின் கதவு திறந்ததும் தாயும், குழந்தையும் பத்திரமாக வெளியேறுவது போன்ற காட்சிகள் உள்ளது.

இந்த வீடியோவை 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். அதில் சில பயனர்கள் கொரியர் ஊழியரை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News