பொது இடங்களில் அநாகரீகமாக ஆடை அணிந்த மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவன் கைது
- பொது இடங்களில் தகாத முறையில் ஆடை அணிய வேண்டாம் என்று பலமுறை எச்சரித்தும் சப்னா கேட்வில்லை.
- சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் பர்லா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காஜிபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோஹித் குமார். இவரது மனைவி சப்னா (28). இவர்களுக்கு 4வயது மகன் உள்ளார்.
இந்நிலையில், சப்னா ஆடை உடுத்துவது தொடர்பாக அவருக்கும் கணவர் மோஹித்துக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதுபோல் நேற்றும் சப்னா தகாத முறையில் ஆடை உடுத்தியதாக தெரிகிறது. இதனால், இருவருக்குள்ளும் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த மோஹித் குமார், சப்னாவை கத்தியால் கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளார். பக்கத்து வீட்டு நபருக்கு இதுகுறித்து சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சப்னாவின் சடலம் அருகிலேயே அமர்ந்திருந்த மோஹித் குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதில், பொது இடங்களில் தகாத முறையில் ஆடை அணிய வேண்டாம் என்று பலமுறை எச்சரித்தும் சப்னா கேட்வில்லை என்றும் இதனால் ஏற்பட்ட தகராறின்போது ஆத்திரத்தில் கொலை செய்துவிட்டதாகவும் மோஹித் போலீசிடம் தெரிவித்துள்ளார்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.