இந்தியா

அபுதாபியில் இருந்து இன்று கோழிக்கோட்டிற்கு புறப்பட்ட விமானத்தின் என்ஜினில் திடீர் புகை

Update: 2023-02-03 07:44 GMT
  • விமானத்தை அபுதாபி விமான நிலையத்திலேயே தரை இறக்க உத்தரவிடப்பட்டது.
  • விமானத்தை விமானி அபுதாபி விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறக்கினார்.

திருவனந்தபுரம்:

அபுதாபியில் இருந்து இன்று காலை கேரள மாநிலம் கோழிக்கோட்டிற்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது.

விமானத்தில் 184 பயணிகள் இருந்தனர். விமானம் புறப்பட்டு வானில் ஆயிரம் அடி உயரத்திற்கு பறந்தது. அப்போது விமானத்தின் ஒரு என்ஜினில் இருந்து திடீரென புகை வந்தது.

இதனை அறிந்த விமானி, உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

உடனே அந்த விமானத்தை அபுதாபி விமான நிலையத்திலேயே தரை இறக்க உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து விமானத்தை விமானி அபுதாபி விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறக்கினார். அதிர்ஷ்டவசமாக எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் காரணமாக அபுதாபி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News