இந்தியா
null

ஆந்திராவில் பெண்களை இரவு நேரங்களில் வீட்டில் கொண்டு விட புதிய திட்டம்

Published On 2023-05-09 05:04 GMT   |   Update On 2023-05-09 09:18 GMT
  • இரவு நேரங்களில் தனியாக பயணம் செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பெண்கள் வீட்டில் விடும் புதிய திட்டத்தை போலீசார் தொடங்கி உள்ளனர்.
  • பெண்களின் பாதுகாப்புக்காக புதிய திட்டத்தை கொண்டு வந்த போலீஸ் சூப்பிரண்டு பிரசாந்திக்கு பெண்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டத்தில் இரவு நேரங்களில் தனியாக பயணம் செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பெண்கள் வீட்டில் விடும் புதிய திட்டத்தை போலீசார் தொடங்கி உள்ளனர்.

இந்த திட்டத்தின் படி இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை வேலை உள்ளிட்ட காரணங்களால் தனியாக பயணம் செய்யும் பெண்களை பாதுகாப்பாக போலீசார் வீட்டில் கொண்டு போய் இறக்கி விடுவார்கள்.

இரவு நேரங்களில் 100, 112, 29 51 75 என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணிற்கு போன் செய்தால் போதும், சம்பவ இடத்திற்கு பெண் காவலர்கள் பைக்கில் வருவார்கள்.

சம்பந்தப்பட்ட பெண் செல்ல வேண்டிய இடத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்று விடுவார்கள்.

இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டால் மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தை விரிவுபடுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தில் பணிபுரிய உள்ள பெண் போலீசாருக்கு கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலைகள் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

பெண்களின் பாதுகாப்புக்காக புதிய திட்டத்தை கொண்டு வந்த போலீஸ் சூப்பிரண்டு பிரசாந்திக்கு பெண்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News