இந்தியா

கல்லூரி மாணவியை மிரட்டி ஒரு மாதமாக பலாத்காரம்- தெலுங்கானா எம்.எல்.ஏ.வின் உதவியாளர் உள்பட 3 பேர் கைது

Published On 2022-12-02 12:32 IST   |   Update On 2022-12-02 12:32:00 IST
  • மாணவியுடன் உல்லாசமாக இருப்பதை செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தார்.
  • எம்.எல்.ஏ.வின் உதவியாளர் சிவகுமார் மற்றும் விடுதி உரிமையாளர் ஷோபா அவரது உறவினர் விஜயகுமார் ஆகியோரை கைது செய்தனர்.

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் ஹனம் கொண்டா பகுதியில் தனியார் விடுதி உள்ளது. இதில் அந்த பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் தங்கி கல்லூரிக்கு சென்று வருகின்றனர்.

இந்த விடுதியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வரும் 22 வயது மாணவி தங்கியிருந்தார். விடுதியில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனை மீறி மாணவி செல்போன் பயன்படுத்தி வந்தார். இதனை விடுதியின் உரிமையாளர் ஷோபா என்பவர் பார்த்துவிட்டார். அவர் மாணவியை மிரட்ட தொடங்கினார்.

தன்னுடைய உறவினர் அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரது ஆசைக்கு இணங்க வேண்டும். இல்லையென்றால் விடுதியில் இருந்து நீக்கி விடுவேன் என மிரட்டினார்.

அவரது மிரட்டலுக்கு பயந்துபோன மாணவி அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து விஜயகுமார் மாணவியை அங்குள்ள ஒரு அறையில் வைத்து பலாத்காரம் செய்தார். ஒரு மாதத்திற்கு மேலாக மாணவியை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்தார். மாணவியுடன் உல்லாசமாக இருப்பதை செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தார்.

பின்னர் இதுகுறித்து விஜயகுமார் அவரது நண்பரான வாரங்கல் கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வின் தனி உதவியாளர் சிவகுமார் என்பவரிடம் தெரிவித்தார். அவரும் மாணவியை அடைய விரும்புவதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மாணவியிடம் சிவகுமாருடன் உறவில் ஈடுபட வேண்டும். இல்லையென்றால் செல்போனில் உள்ள போட்டோ வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டினர்.

இந்த அழுத்தத்தை தாங்கிக் கொள்ள முடியாத மாணவி அவர்கள் கூறியபடி சிவகுமாரின் வீட்டிற்கு சென்றார். அங்கு வைத்து சிவக்குமார் மாணவியை பலாத்காரம் செய்தார்.

மாணவியின் பயத்தை பயன்படுத்திக் கொண்ட சிவகுமார் ஐதராபாத்தில் உள்ள அவரது நண்பர் ஒருவருக்கும் மாணவியை விருந்தாக்க துடித்தார்.

இது குறித்து அவர் மாணவியிடம் கூறினார். இதற்கு மாணவி மறுப்பு தெரிவித்ததால் அனைவரும் சேர்ந்து மாணவியை மிரட்டினர்.

ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்ட மாணவி இது குறித்து ஹனம் கொண்டா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் மாணவியை ஒரு மாதத்திற்கு மேலாக பலாத்காரம் செய்தது தெரியவந்தது. போலீசார் இது தொடர்பாக எம்.எல்.ஏ.வின் உதவியாளர் சிவகுமார் மற்றும் விடுதி உரிமையாளர் ஷோபா அவரது உறவினர் விஜயகுமார் ஆகியோரை கைது செய்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News