இந்தியா

பெங்களூருவில் இன்று அதிகாலை 15 வாகனங்களை அடித்து உடைத்த மர்மநபர்கள்

Published On 2023-11-10 10:34 IST   |   Update On 2023-11-10 10:34:00 IST
  • சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 15-க்கும் அதிகமான கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை சேதப்படுத்தினர்.
  • ராஜகோபால் நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கார் கண்ணாடிகளை சேதப்படுத்தியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் ராஜகோபால் நகர் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட லக்கரே - ராஜீவ்காந்தி நகர் பகுதியில் இன்று அதிகாலை 3 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த 3 பேர் அந்த பகுதியில் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 15-க்கும் அதிகமான கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை சேதப்படுத்தினர்.

அப்போது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்தபோது அந்த 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து ராஜகோபால் நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கார் கண்ணாடிகளை சேதப்படுத்தியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு கார்கள், மோட்டர் சைக்கிளை சேதபடுத்திய மர்மநபர்கள் யார்? என்பதை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News