இந்தியா

எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்..! பஞ்சாப் முதல்வரிடம் சித்து மனைவி வலியுறுத்தல்

Published On 2025-12-13 16:31 IST   |   Update On 2025-12-13 16:31:00 IST
  • பஞ்சாபில் ரூ.500 கோடி கொடுப்பவருக்கே முதலமைசசர் பதவி வழங்கப்படுவதாக நவ்ஜோத் கவுர் கருத்து.
  • நீங்கள் ஏன் மது மற்றும் சுரங்க மாபியாக்களுக்குத் துணைபோகிறீர்கள்?

முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர். பஞ்சாப் காங்கிரசில் தலைவராக இருந்தார். இதற்கிடையே பஞ்சாபில் ரூ.500 கோடி கொடுப்பவருக்கே முதலமைசசர் பதவி வழங்கப்படுவதாக நவ்ஜோத் கவுர் சமீபத்தில் கருத்து தெரிவித்தார்.

இதையடுத்து அவரை கட்சியில் இருந்து காங்கிரஸ் சஸ்பெண்டு செய்தது. இந்த நிலையில் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானிடம் நவ்ஜோத் கவுர் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில்,"எனக்கு இப்போது சில பாதுகாப்பு தேவை என்று நினைக்கிறேன், இல்லையென்றால் அதற்கு நீங்களே பொறுப்பாவீர்கள். மேலும், பஞ்சாப் கவர்னர் நான் எழுப்பிய பிரச்சினைகள் குறித்து உங்கள் தரப்பிலிருந்து ஏன் எந்த பதிலும் இல்லை என்பதை தயவுசெய்து விளக்குங்கள்?

நீங்கள் ஏன் மது மற்றும் சுரங்க மாபியாக்களுக்குத் துணைபோகிறீர்கள்?" என்றார். மேலும், சமீபத்தில் பஞ்சாப் கவர்னரை சந்தித்தபோது தான் எழுப்பிய பிரச்சினைகளை குறிப்பிடும் மனுவின் நகலையும் அவர் பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News