இந்தியா

தால் ஏரியில் "ஷிகாராஸ்" படகுகள் கவிழ்ந்து விபத்து- தண்ணீரில் தத்தளித்த 20 பேர் மீட்பு

Published On 2023-05-26 21:32 GMT   |   Update On 2023-05-26 21:32 GMT
  • ஷிகாரா படகுகள் ஏரியின் நடுவில் பயணத்தில் இருந்ததால் காற்று வேகம் தாளாமல் கவிழ்ந்தது.
  • மோசமான காலநிலையின்போது ஏரிக்கு மக்கள் செல்ல வேண்டாம் என பொது மக்களுக்கு போலீசார் வேண்டுகோள்.

ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகரில் பலத்த காற்று வீசியதால் தால் ஏரியில் பயணத்தில் இருந்த ஷிகாரா எனப்படும் மரக்கட்டையால் ஆன படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்தானது. இதில் பயணம் செய்த பயணிகளும் ஏரியில் கவிழ்ந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், ஏரியில் தத்தளித்த 20க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி மன்ஷா சிங் கூறுகையில், "ஷிகாரா படகுகள் ஏரியின் நடுவில் பயணத்தில் இருந்ததால் காற்று வேகம் தாளாமல் கவிழ்ந்தது. மீட்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்" என்றார்.

மேலும், மோசமான காலநிலையின்போது ஏரிக்கு மக்கள் செல்ல வேண்டாம் என பொது மக்களுக்கு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News