இந்தியா

உச்சத்தை தொட்டு, பின்னர் சரிவுடன் முடிவடைந்த பங்கு சந்தைகள்

Published On 2024-05-27 12:17 GMT   |   Update On 2024-05-27 12:17 GMT
  • ஹெச்டிஎஃப்சி வங்கி, எஸ்பிஐ, இன்போசிஸ், இந்துதாஸ் யுனிலிவர், எல்&டி, பஜாஜ் பைனான்ஸ் போன்ற நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன.
  • ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி, மாருதி சுசிகி, என்டிபிசி, டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகள் சரிவடைந்தன.

இந்திய பங்கு சந்தை, மும்பை பங்கு சந்தை வர்த்தகம் கடந்த வாரம் இறுதியில் உச்சத்தை தொட்டு தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் இன்று மும்பை பங்குசந்தை வர்த்தம் இதுவரை இல்லாத அளவிற்கு சென்செக்ஸ் 76 ஆயிரம் புள்ளிகளை தொட்டு வர்த்தகம் புதிய உச்சத்தை அடைந்தது.

உச்சத்தை அடைந்த மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் புள்ளிகள் மதியம் 12 மணிக்குப் பிறகு சரிவை சந்தித்தது. இறுதியாக மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 75,390 புள்ளிகளுடன் வர்த்தகம் முடிவடைந்தது.

இன்று காலை 75,655.46 சென்செக்ஸ் புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. அதிகபட்சமாக சென்செக்ஸ் 76,009.68 புள்ளிகளுடன் வர்த்தகம் ஆனது. இது இதுவரை இல்லாத வகையிலான உச்சமாகும். குறைந்த பட்சமாக 75175.27 புள்ளிகளில் வர்த்தமானது.

நேற்று 75410.39 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று 75,390.50 புள்ளிகளுடன் அதாவது நேற்றைவிட 19.89 புள்ளிகள் சரிவை சந்தித்து வர்த்தகம் நிறைவடைந்தது.

ஹெச்டிஎஃப்சி வங்கி, எஸ்பிஐ, இன்போசிஸ், இந்துதாஸ் யுனிலிவர், எல்&டி, பஜாஜ் பைனான்ஸ், ஹெச்சிஎல் டெக் போன்ற நிறுவன பங்குகள் இன்று ஏற்றத்தை கண்டன.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி, மாருதி சுசிகி, என்டிபிசி, டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.

அதேபோல் இந்திய பங்குச்சந்தை நிஃப்டி இதுவரை இல்லாத அளவிற்கு 23110.80 புள்ளிகளில் வர்த்தகமானது. இன்று குறைந்த பட்சமாக 22871.20 புள்ளிகளில் வர்த்தகமானது. நேற்று 22957.10 புள்ளிகளுடன் இந்திய பங்குசந்தை வர்த்தகம் முடிவடைந்தது.

இன்று நிஃப்டி 23038.95 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது, நிஃப்டி 22932.45 புள்ளிகளுடன் வர்த்தகம் முடிவடைந்தது.

Tags:    

Similar News