இந்தியா

எமகனமரடி தொகுதியில் ராகு காலத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த சதீஸ் ஜார்கிகோளி

Published On 2023-04-21 08:37 IST   |   Update On 2023-04-21 08:37:00 IST
  • ஒரு கட்சிக்கு எதிராக மற்றொரு கட்சி இருக்கத்தான் செய்யும்.
  • எமகனமரடி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பெங்களூரு :

கர்நாடக மாநில காங்கிரஸ் செயல் தலைவராக இருந்து வருபவர் சதீஸ் ஜார்கிகோளி. இவர், மூடநம்பிக்கைகளுக்கு எதிரானவர் ஆவார். மக்களிடையே மூடநம்பிக்கைகள் குறித்து அவர் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார். நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை கூட மயானத்தில் இருந்தே சதீஸ் ஜார்கிகோளி தொடங்கி இருந்தார்.

சதீஸ் ஜார்கிகோளி, பெலகாவி மாவட்டம் எமகனமரடி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, நேற்று தனது வேட்பு மனுவை அவர் தாக்கல் செய்தார். அப்போது ராகு காலம் மற்றும் சூரிய கிரகண நேரத்தில் தேர்தல் அலுவலகத்திற்கு தனது மகனுடன் சென்று சதீஸ் ஜார்கிகோளி எமகனமரடி தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இதுபற்றி சதீஸ் ஜார்கிகோளி நிருபர்களிடம் கூறுகையில், ஒரு கட்சிக்கு எதிராக மற்றொரு கட்சி இருக்கத்தான் செய்யும். இந்த முறை எத்தனை ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறேன் என்பதை மே மாதம் 13-ந் தேதி அனைவரும் தெரிந்து கொள்ளலாம். எனக்கு ஆதரவாக இந்துகள் எத்தனை பேர் ஓட்டுப்போட்டு உள்ளனர் என்பதும் அன்றைய தினம் தெரிந்து விடும், என்றார்.

Tags:    

Similar News