இந்தியா

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: காங்கிரஸ் கட்சி அலுவலகம் உள்ளிட்ட சொத்துக்கள் முடக்கம் - ED அதிரடி!

Published On 2025-06-14 08:38 IST   |   Update On 2025-06-14 08:38:00 IST
  • ஒரு அரசியல் கட்சியின் சொத்துக்கள் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கப்படுவது இதுவே முதல் முறை.
  • ரூ.2,100 கோடி மதிப்பிலான மதுபான ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கு விசாரணையில் உள்ளது.

சத்தீஸ்கரில் முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.2,100 கோடி மதிப்பிலான மதுபான ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கை அமலாக்கத்துறை (ED) விசாரித்து வருகிறது.

இந்நிலையில் முக்கிய நடவடிக்கையாக, சுக்மா மாவட்டத்திலுள்ள காங்கிரஸ் பவன் அலுவலகம், முன்னாள் அமைச்சர் கவாசி லக்மாவின் ராய்ப்பூர் இல்லம், மற்றும் அவரது மகன் ஹரீஷ் கவாசியின் சுக்மா இல்லம் என மொத்தம் ரூ.6.15 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கியுள்ளது.

ஒரு அரசியல் கட்சியின் சொத்து பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கப்படுவது இதுவே முதல் முறை என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை பா.ஜ.க-வின் அரசியல் சதி என்று சத்தீஸ்கர் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. சுக்மா அலுவலகம் கட்டப்பட்டதற்கான ஒவ்வொரு பைசாவின் கணக்கையும் சமர்ப்பிக்கத் தயாராக இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

Tags:    

Similar News